அதிரையில் பேரூராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!(படங்கள் இணைப்பு)

அதிரை பேரூராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து ஐக்கிய தேசிய மக்கள் கட்சியினர் இன்று காலை 11.00 மணியளவில் பேரூராட்சி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் .இதில் K.ஐயப்பன் (நகர தலைவர்,IDMK),B.மீரா முகைதீன் (நகர துணை செயலாளர்,IDMK), S.H.ஜலாலுதீன் (IDMK) ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் M.மஹதும் நெய்னா  அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள் .மேலும் M.முஹம்மத் யூசுப் (நகர செயலாளர் , IDMK)அவர்கள் தலைமை தாங்கினார்கள் .இதனை தொடர்ந்து பேரூராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து அதிரை M.M.முஹம்மத் இப்ராகிம் மாநில தலைவர் ,IDMK Y.அதிரை மொய்தீன்,M.I.சபிக் அஹ்மத் (மாநில துணை செயலாளர்,IDMK),M.அஹ்மத் மொய்தீன்(நகர அமைப்பாளர்,IDMK) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள் .

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர் .மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கடற்கரை தெரு இளைஞர்களும் கலந்து கொண்டனர் .  

Advertisement

Close