Adirai pirai
posts

இயக்க சண்டைகள் – சமுக வலைதளங்களில் கெட்டுப்போகும் இஸ்லாமியர்கள் மதிப்பு!

image

பொது தளங்களில் நாம் போடும் இயக்கச் சண்டைகள் அன்றாட வாடிக்கையாகிவிட்டது, இதனால் உண்டாகும் எதிர்வினைகள் நம் சமுதாயத்தை வழிகேட்டில் கொண்டு சென்றுவிடும் என்றுகூட தெரியாமல் ஆனந்தமாய் முகநூலில் அடுத்த இயக்கத்தின் தலைவர்களையும், அவர்களது கொள்கைகளையும், அவர்கள் செய்யும் சேவைகளையும் கொச்சைப்படுத்தி தன்னுடைய தன்மானத்தையும் அடகு வைத்துவிடுகின்றனர். பொதுதளத்தில் போடப்படும் இத்தகைய இயக்கச் சண்டைகள் மூலம் வரும் சில பின்விளைவுகள் எனனவென்பதை காண்போம் வாருங்கள்:

1. பொதுதளங்களில் இதுபோன்ற இயக்கச் சண்டைகளால் நம்முடைய ஒற்றுமையின் கோலம் உலகளவில் அறங்கேற்றப்படுகிறது.

2. நம்மிடையே உள்ள இயக்கங்களின் நற்சேவைகள் கூட கேவலப்படுத்தப்பட்டு பொதுமக்களால் அவைகளின் மதிப்பு குறைக்கப்படுகிறது.

3. நம்மிடையே சண்டையிட்டுக்கொள்வதால் பாசிச சக்திகள் எளிமையாக அவர்களது சூழ்ச்சியை நம் சமுதாயத்தில் அறங்கேற்ற நாமே உதவி செய்ததுபோல் ஆகிவிடுகின்றது.

4. பிற இயக்கத்து தலைவர்களை கேலி கிணடல் செய்வதன் மூலம் அவர்களுக்கு சமூகத்தில் இருக்கக்கூடிய அந்தஸ்த்தும் மதிப்பும் குறைந்து விடுகின்றது.

5. பொதுதளத்தில் இயக்கச் சண்டையில் ஈடுபடும் இளைஞர்களுக்கு விரோத மனப்பான்மை அதிகரித்து எதிர் இயக்கத்தார்களை (தனது உறவினராக இருந்தாலும்கூட) பகைவனாக மாற்றிவிடுகின்றது.

6. ஒற்றுமையையும் சமாதானத்தையும் போதிக்கும் ஏக இறைவனின் கட்டளைக்கு புறம்பாகவும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கைமுறைக்கு மாற்றமாகவும் நடக்க இச்சண்டைகள் தூண்டுகின்றன.

7. பிற இயக்கத்தின் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டும் நோக்கத்தில் அதன் வரலாறுகளை இளைஞர்கள் ஆய்வுசெய்வதால் உண்மையான வரலாறுகளை தெரிந்துகொள்ளும் மனப்பான்மை இல்லாமல் போகின்றது.

8. அடிக்கடி பொதுதளங்களில் சண்டைகளின் மூலம் மனஉளைச்சலும் கோபமும் அதிகரித்து உடற்கோளாறுகள் உண்டாகின்றன.

எனவே இளைஞர்களே! நாம் இயக்கச் சண்டைகளை தவிர்த்து தன்மானத்தையும் சமுதாய நலனையும் காத்து சமூக வளைதளங்களை ஆரோக்யமான முறையில் பயன்படுத்திட முயற்சி  செய்வோம்..

image

!!

S.A.M. முஹம்மது நாசர்.  (லால்பேட்டை)