அதிரையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்ட லயன்ஸ் சங்கத்தின் இஃப்தார் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

20150715064128அதிரையில் இன்று (15-07-2015) புதன்கிழமை லயன்ஸ் சங்கம் நடத்திய மாவட்ட இப்தார் நிகழ்ச்சி லாவண்யா திருமண மண்டபத்தில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது .இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இப்தார் விருந்து தலைவர் Ln.சாரா M.அகமது அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆளுநர் PMJF.LION.S.வேதநாயகம் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு திருமிகு.N.R.ரெங்கராஜன் (பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்), திருமிகு.R.ஜவகர் பாபு (நகர்மன்ற தலைவர் ,பட்டுக்கோட்டை), திருமிகு.S.செங்கமலக்கண்ணன் (காவல் துணை கண்காணிப்பாளர் ,ஒரத்தநாடு) ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இதில் யூசுஃப் மௌலானா சிறப்பு பயான் நிகழ்த்தினார்கள். மேலும் பேராசிரியர்.பர்கத் அவர்கள் துவா ஓதினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு 500 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்,வந்து இருந்த அனைவரையும் சாரா .அஹ்மத் மற்றும் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் அன்புடன் வரவேற்று கவனித்தனர்.

 

Close