அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற மீலாத் நபி விழா! (படங்கள் இணைப்பு)

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று (09-02-2015) காலை 10.30 மணியளவில் கல்லூரி ஹாஜி A.M.சம்சுதீன் நினைவு கலையரங்கத்தில் மீலாத் நபி விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹாஜி.A. ஜலால் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். மேலும் காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் முன்னிலை வகித்தும் அறிமுக உரையாற்றினார்கள் .

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஜனாப். A.Y.முஹ்யித்தீன் பைஜுல் பாழில் ரஷாதி (முதல்வர் ,பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரி,திருநெல்வேலி மேற்கு மாவட்ட காழி) அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் முனைவர் அ.கலீல் ரஹ்மான் (தமிழ்த்துறை தலைவர்,காதிர் முகைதீன் கல்லூரி)  அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியில் காதிர் முகைதீன் கல்லூரியில் நடத்தப்பட்ட  நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களைப் பற்றிய பேச்சு போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு சான்றிதல்களும், ஹதீஸ் புத்தகங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் அட்மினிஸ்ட்ரேட்டர், கல்லூரியின் முன்னாள் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர், பேராசிரியைகள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள்,ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

Advertisement

Close