போலி IND நம்பர் பிளேட்டுகள் பொருத்திய வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை!

போலி IND நம்பர் பிளேட்டுகள் பொருத்திய வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட SP உத்தரவிட்டுள்ளார்.
மத்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, உரிய அளவுகளில், வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும். ஆனால், பல்வேறு அளவுகளிலும், வடிவங்களிலும் நம்பர் பிளேட்டுகளில் பொறுத்தப்பட்டு வருகிறது. மேலும், கட்சிக் கொடி, தலைவர் படங்கள், நடிகர், நடிகை படங்கள், பிடித்தமான வாசகங்களுடன் என, நம்பர் பிளேட்டுகள் பொருத்துவது அதிகரித்து வருகிறது.
இதனால், விபத்து மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களில் வாகனங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, அனைத்து வாகனங்களிலும், உயர் பாதுகாப்பு பதிவு எண் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என, கடந்த, 2011ல், மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த நம்பர் பிளேட்டில், எழுத்து, எண் வடிவங்கள் ஒரே சீராகவும், வாகன இன்ஜின் மற்றும் அடிச்சட்டம் எண்கள், வாகன உரிமையாளர்கள் விவரங்கள் அடங்கிய, “ஹாலோகிராம்’ முத்திரையும் இடம் பெற்றிருக்கும்.
இத்திட்டம் ஒரு சில மாநிலங்களில் மட்டும் தான் அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு நிலு வையில் இருப்பதால், தமிழகத்தில் புதிய திட்டம் அமல்படுத்தவில்லை.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு பின், நீல நிறத்தில் IND மற்றும், “ஹாலோகிராம்’ ஸ்டிக்கருடன் கூடிய வாகன நம்பர் பிளேட் பொருத்த தமிழக அரசு தடை செய்துள்ளது. மேலும், தஞ்சை SP தர்மராஜன் வெளியிட்ட அறிக்கையில் IND  என்ற போலி நம்பர் பிளேட்டுகளை, வாகனங்களில் பொருத்துவது மற்றும் தயாரிப்பதும், விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றம். தகவல் தெரிந்தால், 043 362 277466, 277174 அல்லது 100 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம், என தெரிவித்து உள்ளார்.

Close