அதிரை பெரிய ஜும்மா பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற தமாம் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

20150716101314இன்றுடன் தமிழக முஸ்லிம்கள் 28 வது நோன்பை நிறைவு செய்துள்ளனர். அதிரையை பொருத்தவரை 27வது பிறைக்கு பின்னர் பல பள்ளிகளில் குர்ஆன் நிறைவு செய்யப்பட்டு தமாம் விடுவது வழக்கம். அந்தவகையில் இன்று பெரிய ஜும்மா பள்ளியில் தமாம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தராவீஹ், வித்ர் தொழுகைக்கு பிறகு மௌலவி ஹைதர் அலி ஹஜ்ரத் அவர்களின் மார்க்க சொற்பொழிவும் அதனை தொடர்ந்து துஆ நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தப்ரூக் வழங்கப்பட்டது. இதில் பல நூற்றுக்கணக்கான அதிரையர்கள் கலந்துக்கொண்டனர்.

 

 

Close