Adirai pirai
EID SPECIAL உள்ளூர் செய்திகள்

அதிரையிலும் நாளை நோன்புப் பெருநாள்!

20140728_081103உலக முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டின் ரமலான் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. சில நாடுகளில் பிறை தென்பட்டுள்ளது. சில நாடுகளில் பிறையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

அந்த வகையில்சவூதி மற்றும் துபை உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 29 நாட்களாக சவூதி உள்ளிட்ட நாடுகளில் புனித ரமளான் நோன்பு கடை பிடித்து வந்த நிலையில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச பிறை அடிப்படையில் அதிரையிலும் எந்தவொரு அமைப்பும் சாராத சிலரால் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

இந்த நோன்புப் பெருநாள் தொழுகை அதிரை நடுத்தெரு வாஹித் பெயிண்டர்ஸ் சம்சுத்தீன் அவர்களின் இல்லத்தில் காலை 7.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

மேலும் விபரங்களுக்கு:  9042157371

குறிப்பு: வெளிநாடுகளில் நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடும் அதிரை சகோதரர்கள் தங்கள் புகைப்படங்களை அதிரை பிறையில் பதிய விரும்பினால் – 9597773359 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பவும்.