முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் களப்பணியாற்றும் நம் சமுதாய இளைஞர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

சமூக வலைத்தளங்களில் களப்பணியாற்றும் நம் சமுதாய இளைஞர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

சமீபநாட்களாக பேஸ்புக், வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூகத்தளங்களில், பாசிச வெறியர்களின் திட்டமிட்டபொய் புரச்சாராத்தை நம் சமுதாயச் சகோதரர்கள் தலைமேல் எடுத்து அதி முக்கியப் பணியாக பரப்பி வருவதைக் காண முடிகிறது.

இளைய சமுதாயத்திற்கு சரியான வழிகாட்டல் இல்லாவிட்டால் அவர்களாலேயே இந்தச் சமுதாயத்தை அழிவுப் பாதைக்கு எடுத்துச் சென்று விடுவார்களோ என்று அஞ்சும் அளவிற்கு நம் இளைய சமுதாயத்தின் செயல்கள் சமூகத்தளங்களில் உள்ளன.

முஸ்லிம் பெண் – ஹிந்து வாலிபரின் பெயரில் அச்சடிக்கப்பட்ட பொய்த் திருமண பத்திரிக்கை.

பொட்டு வைத்த ஹிந்து வாலிபர் – முஸ்லிம் அடையாளத்துடன் உள்ள பெண்னுடன் போட்டா ஷாப்பில் உறுவாக்கப்பட்ட புகைப்பட்டம். (உண்மை என்று நம்பி)

பாசிச சமூக விரோதிகளால் திட்டமிட்டு பரப்பப்படும் இது போன்ற பொய்செய்திகளை அதன் உண்மைத் தன்மை தெரியாமல் நம் சமூதாய இளைஞர்கள் வளைத்தளங்களில் பரப்புவதன் மூலம் உங்களின் ஈமானை பதம் பார்த்து உங்களின் ரோசத்தை மழுங்கச் செய்யும் வேலையை பாசிச சமூகவிரோதிகள் திட்டமிட்டு செய்து வருகிறார்கள்.

தொடர்ந்து இது போன்ற பொய்த்தகவல்களை பரப்புவதன் மூலம் இது போன்ற செயல்கள், காரியங்கள் சமுதாயத்தில் சாதாரணமாகி விட்டது போன்ற மன பிரம்மையை ஏற்படுத்த முயல்கிறார்கள். அதன் மூலம் சமுதாயத்தில் பிளவுகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்த நினைக்கிறார்கள் அல்லது அது போன்ற காரியங்கள் அவர்களால் நிகழ்த்தப்படும் போது அது சாதாரனமான குற்றமாக இந்த சமுதாயம் கண்டு ஒதுங்கி விடும் நிலையை உறுவாக்கவே இது போன்ற பொய்ச் செய்திகளை பரப்புகிறார்கள்.

சகோதரர்களே! பாசிச சூழ்ச்சியாளர்களின் சூழ்ச்சியை தெரிந்து கொள்ளாமல் இது போன்ற செய்திகளை வெளியிடுவதோ, ஃபார்வெட் செய்வதோ, ஷேர் செய்யவோ செய்யாதீர்கள் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

உங்களுக்குத் தெரியுமா?

பைத்துல் முகத்தஸ் – மஸ்ஜித் அல் அக்ஸா பள்ளியில் தோன்றம்.

யூதர்களின் திட்டமிட்ட பொய்பிரச்சாரத்தின் காரணமாக இன்னைய தலைமுறைக்கு தெரிவது “குப்பத் அஸ் ஸ‌க்ரா Qubbat As Sakhrah மஸ்ஜித்” என்ற பள்ளியைத் தான் மஸ்ஜித் அல் அக்ஸா என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மையான அக்ஸா பள்ளி எதுவென்று இங்கே இணைக்கப்பட்டுள்ள படத்தில் விளக்கப்பட்டள்ளது.

இது போன்று பொய்யர்களின் திட்டமிட் பொய்பிரச்சாரத்திற்கு நம் சமுதாயம் பலியாகி விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் நாளைக்கு உண்மையான அக்ஸா பள்ளியை யூதர்கள் இடித்துவிட்டால் உலக முஸ்லிம்களுக்கு தெரியப் போவதில்லை. காரணம் “குப்பத் அஸ் ஸ‌க்ரா Qubbat As Sakhrah மஸ்ஜித்” என்ற பள்ளியில் தொழுகை நடப்பதை தொலைகாட்சியில் காட்டி ஏமாற்றி விடுவார்கள்.

எச்சரிக்கை சகோதரர்களே! பாசிசவாதிகளின் திட்டமிட்ட பொய்ப்பிரச்சரத்தின் மூலம் உணர்ச்சிகளுக்கு பலியாகிவிடாதீர்கள்.

இனிமேல் இது போன்ற திருமணப் பத்திரிக்கைகளையோ புகைப்படங்களையோ பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பிரார்த்தனைகளுடன்
எம். ஹூஸைன்கனி
தமுமுக – ரியாத்.

Advertisement

Close