புதிதாக வெளிநாடுகளுக்கு செல்ல 1 லட்சம் கூடுதல் செலவாகும்! ஓர் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவிலிருந்து தமிழகம், கேரளாவிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள், கூலி தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். குறிப்பாக ஓமன், ஐக்கிய அரபு நாடுகள், கத்தார், பக்ரைன், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு அதிகளவு டிரைவர், கட்டுமான தொழில், வீட்டு வேலைகள், கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு கூலி வேலைக்காக செல்கின்றனர்.வேலைக்கு செல்லும் இளைஞர்கள் விசா, மருத்துவ பரிசோதனை என அதிகப்பட்சம் ரூ.75 ஆயிரம் வரை செலவு செய்வர். குறிப்பாக குவைத் செல்லும் கூலி தொழிலாளர் ஒருவருக்கு அதிகபட்சமாக ஏஜென்ட்டுக்கு வழங்கும் கமிஷன் உட்பட ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவாகும்.
ஆனால் தற்போது மருத்துவ சோதனைக்கான கட்டணம் ரூ.3,500லிருந்து ரூ.24 ஆயிரமாகவும், விசா ஸ்டாம்பிங் கட்டணம் ரூ.6,000லிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தியதிலிருந்து ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.மேலும் நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களின் முக்கிய நகரங்களில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் குவைத் நாட்டுக்கு செல்வோர் மட்டும் டில்லி, மும்பை, கொச்சி, ஐதராபாத் ஆகிய 4 இடங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் தான் பரிசோதனை செய்ய வேண்டுமென வரையறுக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகம் மட்டுமின்றி இந்த மையங்களிலிருந்து தொலைதூரத்தில் வசிக்கும் அனைத்து கூலி வேலைக்கு செல்வோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் டிராவல்ஸ் நிறுவன ஏஜென்ட்கள் கூறுகையில், ‘மருத்துவ பரிசோதனை, ஸ்டாம்பிங் கட்டணம் உயர்வால் கூடுதலாக ரூ.50 ஆயிரம் செலவு செய்ய வேண்டியுள்ளது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் கிராமப்புற கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விசா வாங்கி கொண்டு செல்வதா, வேண்டாமா என்று லட்சக்கணக்கான இளைஞர்கள் யோசித்து கொண்டுள்ளனர். இக்கட்டணம் குறைந்து மீண்டும் பழையவாறு மாநிலத்தின் முக்கிய நகரங்களில் மருத்துவ சோதனை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்’ என்றனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close