Adirai pirai
உள்ளூர் செய்திகள்

வெற்றிகரமாக 4 வது ஆண்டுக்குள் நுழையும் அதிரை பிறை!

4TH YEAR APஅதிரை பிறை இணையதளம் துவங்கி 3 ஆண்டுகள் நிறைவுபெற்று இன்றுடன் 4ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. 3 அண்டுகளுக்கு முன்னர் ரமலான் தலைபிறை அன்று துவங்கப்பட்ட நம் தளம் தற்போது சர்வதேச பெருநாள் பிறையுடன் உலக மக்கள் நோன்பு பெருநாள் கொண்டாடும் இந்த நன்னாலில் அதிரை பிறை 4 ஆண்டுக்குள் அடியெடுத்து வைப்பது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியளிக்கின்றது.
அதிரையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் செய்திகளாக உடனுக்குடன் எந்தவித பாரபட்சமும் இன்றி அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் உண்மை தண்மை மாறாமல் அளித்துக் கொண்டிருக்கிறோம்.
துடிப்பான இளைஞர்களை செய்தியாளர்களாக கொண்டு இந்த இணையதளம் நடத்தப்படுகிறது.
03 வருடங்களில் மொத்தம் 4,536 செய்திகளை பதிந்துள்ளோம். வெறும் செய்திகளை மட்டும் தராமல் உள்ளூர் நிகழ்வுகள், மாவட்ட, மாநில, தேசிய, உலக  அளவிலான நிகழ்வுகள், மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி அறிவுரைகள், பொதுமக்களுக்கு தேவையான அரசு சார்ந்த அறிவிப்புகள் மற்றும் விளக்கங்கள், அதிரை புகார்கள், அயல் நாட்டில் வாழும் அதிரையர்களின் நிகழ்வுகள், மருத்துவ குறிப்புகள், விளையாட்டு செய்திகள் போன்ற பல்சுவை தகவல்களை உடனுக்குடன் தந்து சென்ற ஆண்டுகளை விட இந்த வருடம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் இந்த தளம் பெற்றுள்ளது.
நாம் பதியும் புகார் சம்பந்தமான செய்திகளை வெறும் செய்திகளாக பதியாமல் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் அன்புடன் கோரிக்கையாக  அளித்து ஒரு சில பகுதிகளில் அந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. பொருப்பில் உள்ளவர்கள் நண்மை செய்தால் பாராட்டுவதும், சரி இல்லையெனில் கண்டிப்பதையும் வழக்கமாக இந்த தளம் கொண்டுள்ளது. “நடுநிலை” என்ற ஒற்றை வார்த்தை தான் அதிரை பிறையின் கொள்கையாக கொண்டுள்ளோம்.
PIRAI TUBE, DR. PIRAI, மண்டே மசாலா, LAWYER PIRAI, LADIES CARE, சுட்டீஸ் பிறை, சிந்தனை சிறகுகள்,  போன்ற வித்தியாசமான தலைப்புகளின் கீழ் காணொளிகளையும் மருத்துவக் குறிப்புகளையும், ஊரில் தற்சமயம் நடைபெறும் நிகழ்வுகளையும், பல்சுவை தகவல்களையும் பதிந்து வருகின்றோம்.
அதிரை அளவில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த உண்மையான வலுவான ஒரு ஊடகத்தை அளிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இது போன்று எந்தவொரு லாப நோக்கமும் இன்றி அதிரை மக்களுக்கு இந்த அதிரை பிறை என்னும் ஊடகம் மூலம் முழுக்க முழுக்க இளைஞர்களாக சேவையாற்றி வருகிறோம்.
இந்த ஆண்டு அதிரை பிறை வளர்ச்சிகளுக்கு மத்தியில் பல்வேறு சோதனைகளையும் சந்தித்துள்ளது. 4 நாட்கள் இணையதளம் கயவர்களால் முடக்கப்பட்டஹு. இரண்டு முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டன. இருப்பினும் மீண்டும் இந்த சோதனைகள் எதிர்த்து போராடி சாதனைகளாய் மாற்றவே முயன்று வருகின்றோம்.
மேலும் ரமலான் துவக்கத்தில் அதிரையின் பிற இணையதளங்கள் போல் இல்லாமல் புதுப் பொழிவுடன் பிளாக்கரில் இருந்து முழுமையாக வெளியாகி தனியாக ஒரு ப்ரொஃபசனல் செய்தி தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தளம் மூலம் அனைத்து செய்திகளையும் தலைப்பு வாரியாக காணும் வசதி அரிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தளம் மூலம் மொபைல் பயனர்களும் இலகுவாகவும் கணிணியில் பயன்படுத்துவதைப் போன்று மொபைலிலும் பயன்படுத்தலாம். மேலும் பழைய தளம் போன்றில்லாமல் இது மிக வேகமாக செய்திகளை பார்ப்பதற்க்கும் படிப்பதற்க்கும் வசதியாக இருக்கும் வண்ணம் மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஆன்டிராய்டு மொபைல் பயனர்கள் இதனை எளிதாக உபயோகிக்க அப்லிகேசனும் உருவாக்கப்பட்டது.
இவை அனைத்தும் வாசகர்களாகிய உங்களுக்காக மட்டுமே!
நாங்கள் பதியும் அனைத்து  செய்திகளையும் படித்து தவற்றை சுட்டிக்காட்டியும் நல்லதாக இருந்தால் ஆதரித்தும் வரும் அதிரை பிறை நேயர்களுக்கும் தங்கள் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளையும் புகார்களையும் எங்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தும் அதிரை வாசகர்களுக்கும், அந்த செய்திகளை சமுக தளங்களில் பிறருக்கு தெரியப்படுத்தும் நல்லுள்ளங்களுக்கும் அதிரை முகநூல் நண்பர்களுக்கும்  அதிரையில் உள்ள அனைத்து முஹல்லா சங்கங்களுக்கும் அதிரையில் இயங்கிக் கொண்டிருக்கும் அணைத்து இயக்கங்களுக்கும் அனைத்து தருனங்களிலும் எங்களுக்கு அறிவுரைகளையும் ஒத்துழைப்பையும் தந்து வரும் நல்ல நெஞ்சங்களுக்கும் அதிரை பிறை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதிரை பிறையில் செய்தியாளராக, செய்தி பதிவாளராக, போட்டோகிராபராக அல்லது உறுப்பினராக இணைய கீழே உள்ள எண்ணுக்கு தொடர்புகொள்ளவும். (வெளியூர் வாசிகளும் இணையலாம்) (இளைஞர்களுக்கு முன்னுரிமை)
-நூருல் இப்னு ஜஹபர் அலி – 9597773359

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy