அதிரையில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை! (படங்கள் இணைப்பு)

20150716195018

உலக முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டின் ரமலான் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. சில நாடுகளில் பிறை தென்பட்டுள்ளது. சில நாடுகளில் பிறையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

அந்த வகையில்சவூதி மற்றும் துபை உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 29 நாட்களாக சவூதி உள்ளிட்ட நாடுகளில் புனித ரமளான் நோன்பு கடை பிடித்து வந்த நிலையில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச பிறை அடிப்படையில் அதிரையிலும் எந்தவொரு அமைப்பும் சாராத சிலரால் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று காலை அதிரை நடுத்தெருவில் நடைபெற்றது. இதில் அதிரையர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

குறிப்பு: வெளிநாடுகளில் நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடும் அதிரை சகோதரர்கள் தங்கள் புகைப்படங்களை அதிரை பிறையில் பதிய விரும்பினால் – 9597773359 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பவும்.

 

Close