அதிரை பிறைக்கு என்னுடைய வாழ்த்துக் கவிதை

4TH YEAR APஅதிரை இணைய வானில் என்றும்
அதிராப் பிறை எங்கள் அதிரை பிறை

இளைஞர்களின் நிர்வாகம்
இமைபொழுதும் துஞ்சாத விவேகம்

படிப்படியாய் முன்னேற்றம்
துடிப்புடனே வளரும் பெரும் மாற்றம்

நான்காம் ஆண்டுகள் கடந்த சாதனை
நானிலமும் செய்திகள் கூறும் இதனை

அதிரை பிறையின் இணைய முகம் பார்த்து
அன்புடனே வழங்குகின்றேன் இவ்வாழ்த்து

வாழ்க வளமுடன்
சூழ்க பலமுடன்

-அதிரை கவியன்பன் கலாம்

Close