அதிரை சிறுவர்கள் விபத்து! ஒருவர் படுகாயம்!

20150717092148அதிரை பேருந்து நிலையம் அருகே கடந்து செல்லும் ஈ.சி.ஆர் சாலையில் ஜானகி என்ற கட்டிட பெண் தொழிலாளி (வயது 65) நின்றுக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த சாலையில் அதிவேகமாக கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த சிறுவர்கள் அந்த மூதாட்டியின் மீது மோதினர். இதில் நிலை குழைந்த அந்த மூதாட்டி படுகாயமடைந்தார்.

 

இதனை அடுத்து அருகில் நின்றுக்கொண்டிருந்தவர்கள் அந்த பெண்மனியை மீட்டு அதிரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனை அடுத்து அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. விபத்து குறித்து அதிரை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

 

அதிரையில் வண்டி ஓட்ட கால் கூட எட்டாத நிலையில் சிறுவர்கள் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு செல்வதால் அவர்களுக்கோ அல்லது அப்பாவி மக்களுக்கோ ஆபத்து. ஊரில் விபத்துகள் மூலம் பல உயிரிழப்புகள் நிகழ்ந்தும் நமது பெற்றோர்களுக்கும், சிறுவர்களுக்கும் விழிப்புணர்வு கிடைக்கவில்லை.

Close