ஈந்துவக்கும் ஈதுல்ஃபித்ர் – நோன்புப் பெருநாள்

ஈந்துவக் கும்திரு நாளாம் இகமதில் ஈத்பெருநாள்
நீந்திய பாவம் கடக்கப் புரிந்தநம் நீள்தவத்தை
ஏந்திய நோன்பால் விளைந்த பரிசினை ஏற்றிடத்தான்
சாந்தியாம் சொர்க்கம் கிடைக்கும் உறுதியைச் சாற்றிடுமே

புண்ணியம் செய்தவ ரென்றும் மகிழ்ந்துப் புகழ்ந்திடத்தான்
எண்ணிலா நன்மை பொழிந்திடச் செய்யும் இறையருளால்
மண்ணிலி றங்கிச் சலாமுடன் வாழ்த்தும் மலக்குகளால்
கண்ணியம் செய்வதை யென்றும் நினைத்துக் களிப்புறவே

இற்றைத் திருநாள் நமக்குப் பிறையாய் இறங்கியது
பெற்ற கொடையை விடாமல் நுகர்வோம் பெருமிதமாய்
கற்ற பயிற்சிகள் நிற்க மனத்திற் கவனமுடன்
சற்று முயற்சி தயக்கம் இலாமல்நீ சாதிக்கவே!

https://www.youtube.com/watch?v=Lpx9oizFeQo
sighting-moon

Close