அதிரையில் கோலாகலமாக துவங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர்போட்டி! (படங்கள் இணைப்பு)

20150718053834அதிரை SSM குல் முஹம்மது நினைவு கால்பந்து அணி நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர்போட்டி நமதூர் கடற்கரைத் தெரு மைதானத்தில் இன்று துவங்கி நடைபெற்றது. முதல் போட்டியான இன்று பட்டுக்கோட்டை அணியை எதிர்த்து KFC கண்டனூர் அணி விளையாடியது.

முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் சமநிலையில் இருந்தனர். இரண்டவதுப் பகுதி நேர ஆட்டத்தில் சுதாரித்துக்கொண்ட பட்டுக்கோட்டை அணி முதலாவது கோலை அடித்தது. இதனை எதிர்த்து போராடிய கண்டனூர் அணிக்கு எதிராக மேலும் ஒரு கோலை அடித்து தனது வெற்றி வாய்ப்பை பலப்படுத்தியது பட்டுக்கோட்டை. இதனை அடுத்து 2-0 என்ற கோல் கணக்கில் AVK பட்டுக்கோட்டை அணி அபார வெற்றி பெற்றது.

இதில் முதல் பரிசாக 20,000 ரூபாய் மற்றும் சுழற்கோப்பையும் இரண்டாவது பரிசாக 15,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. நாளையதினம் STUDENTS CLUB திருச்சி அணியை எதிர்த்து விவேகானந்தா பட்டுக்கோட்டை அணி விளையாடவுள்ளது. அதுசமயம் கால்பந்தாட்ட ரசிகர்கள் அனைவரும் இனி வரும் ஆட்டங்களை கண்டுகளிக்க வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close