அதிரையில் அவசரத்திற்க்கு மருத்துவர் இல்லாததால் குழந்தை இறந்து போன பரிதாபம்!

medical1அதிரையில் கடந்த பல வருடங்களாக அவசரத்திற்க்கு இரவு நேர மருத்துவர் இல்லாததால் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனை அடுத்து கொதிப்படைந்த மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி அதிரை அரசு மருத்துவமனைக்கு இரவு நேர மருத்துவரை கிடைக்க செய்தனர்.

 

இது ஒரு புறம் இருக்க இன்று அதிகாலை அதிரையை சேர்ந்த பெண்மனி தனது கைக்குழந்தை தூக்கிக் கொண்டு அதிரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவரை காண பதறியடித்துக்கொண்டு ஓடி வருகிறார். அவரிடன் விசாடித்ததில் காலை பால் அருந்தும் போது அந்த குழந்தைக்கு அடைத்து விட்டது. மூச்சு சரியாக வரவில்லை என்றார். ஆனால்அங்கு அந்த தனியார் மருத்துவர் இல்லை. இதனை அடுத்து இரவு நேர மருத்துவர் இருப்பார் என்று கூறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு இரவு நேர மருத்துவர் இல்லாதது கண்டு அந்த தாய் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அங்குள்ள செவிலியர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு இறந்துவிட்டதாக கூறியதை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தார் அந்த பெண்மனி. ஆனால் அதை உறுதிபடுத்தக்கூட அங்கு ஒரு மருத்துவர் இல்லாதது வேதனைக்குறிய விஷயமாகும்.

 

இதனை நேரடியாக கண்ட ஒரு நபர் நமது செய்தியாளர்களிடம் கூறியதாவது அதிராம்பட்டினம் இவ்வளவு பெரிய ஊர் என்று கூறி என்ன பயன்! உயிருக்கு போராடும் அந்த குழந்தை காப்பாற்ற மருத்துவர் இல்லையே! நாம் அனைவரும் அந்த குழந்தையை பறிகொடுத்து தவிக்கும் அந்த தாயின் மனநிலையில் இருந்து சிந்திக்க வேண்டும் என்றார்

Close