பெருநாள் மறுநாள் சினிமா! அதிரை இளைஞர்களின் அவல நிலை!

movietheaterஇந்த வருடம் மிகச் சிறப்பாக துவங்கிய ரமலான் மாதம் அதே சிறப்புடன் அழகாய் நம்மை விட்டு பிரிந்தது. ஒரு வருடம் முழுவதும் தொழுகைக்கு வராதவர்களையும் பள்ளிகளில் பார்க்க முடிந்தது. 30 நாட்கள் உண்ணாமலும் பருகாமலும் அல்லாஹ்வுக்காக நம்மை கட்டுப்படுத்திக்கொண்டோம். இந்த மாதத்தில் நம் நோன்பாளிகள் அனைவரிடமும் தக்வா நிறம்பி காணப்படும் நோன்பு வைத்த நிலையில் பசித்திருந்தாலும் அருகில் உள்ள உணவை உண்ண மாட்டோம். அது போல் பல்வேறு தீய பழக்கங்களில் இருந்து விடுபடுவதற்காகவும் நண்மைகளை வாரி வழங்கும் மாதமாக அல்லாஹ் நமக்கு இம்மாதத்தை வழங்கினான்.

 

ஆனால் சிலர் இம்மாதத்தில் மட்டும் நண்மைகள் செய்தால் போதும் பிற மாதங்களில் சகஜ நிலைமைக்கு திரும்பிவிடுகின்றனர். அதிரையில் பல இளைஞர்கள் பெருநாளுக்கு மறுநாள் சினிமாவுக்கு செல்வதை நம்மால் காண முடிகின்றது. முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என்று பார்த்து படத்தை வெளியிடும் சினிமாகாரர்கள் தற்போது முஸ்லிம்களின் இந்நிலையை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு ரம்ஜான் ரேஸ் என்று பெருநாள் அன்று படத்தை வெளியிடுகின்றனர். இதனால் இளைஞர்களும் நூற்றுக்கணக்கான ரூபாய்களை செலவளித்து மூன்று மணி நேரம் சினிமா பார்த்து விட்டு திரும்புகின்றனர்.

 

30 நாட்கள் நோன்பு பிடித்து விட்டு மறுநாளை இப்படி பாவமான காரியங்களை செய்வதற்க்கு நமக்கு எப்படி மனம் வருகின்றது. அப்படியென்றால் 30 நாட்கள் நோன்பிருந்ததற்க்கு என்ன பயன். இதில் சில வேதனைக்குறிய செயல் என்னவென்றால் ஒரு சில குடும்பஸ்தற்கள் தங்கள் மனைவி மக்களுடன் குடும்பத்துடன் பட்டுக்கோட்டைக்கு சென்று படம் பார்க்கின்றனர். குடும்பத்துக்கு வழிநடத்த வேண்டிய ஆண்களே தங்கள் குடும்பத்தை இப்படி தவறாக வழிநடத்துகின்றனர். பல இளைஞர்கள் வேகமாக சினிமா பார்க்க செல்கின்றனர். இப்படி செல்லும் போது ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் அவரது நிலை என்ன. அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!!

-நூருல் இப்னு ஜஹபர் அலி

Close