போன் கால் மூலம் அதிரையர்களிடம் மோசடி (படம் இணைப்பு)

image

அதிரை மேலத்தெருவை சேர்ந்த ஒரு வீட்டுக்கு சில நாட்கள் முன்னர் ஒரு போன்கால் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய ஒரு நபர் நீங்கள் இந்த சிம் கார்டை 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றீர்கள். எனவே உங்களுக்கு பரிசுகள் வழங்கவுள்ளோம். அதில் சாம்சங் கேலக்ஸி போன் ஒன்றும், தங்க நாணயமும், வெள்ளி மோதிரம் ஒன்று வழங்கவுள்ளோம்.

அதற்க்கு நீங்கள் தபால் நிலையத்தில் 2500 ரூபாய் பணம் கொடுத்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர்கள் 2500 ரூபாய் பணம் கொடுத்து பார்சலை பெற்றுள்ளார். வீட்டில் வந்து ஆசையுடன் பார்சலை பிரித்து பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலில் சாமி பொம்மைகளும் பழங்கால பொருட்கள் மட்டுமே இருந்தது அதிர்ச்சி அடைந்துள்ளார். தான் ஏமாற்றமடைந்தது கண்டு செய்வதறியாது திகைத்துள்ளார்.

இது போல் அதிரை மேலத்தெருவிலேயே இன்னொரு நபரும் ஏமாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்று செல்போன் மூலன் மோசடிகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இது போன்ற மோசடிகளில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருப்பது காலத்தின் கட்டாயம்.

Close