19 மணி நேரம் நோன்பு பிடித்துக் கொண்டு ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய மொயின் அலி!

Englands-Moeen-Ali-008

இந்த ரமலானில் 19 மணித்தியாலங்கள்என்கிற நீண்ட பகல் பொழுதில்இறைவனால் கடமையாக்கப்பட்ட நோன்பை கடைபிடித்தபடியே அவுஸ்திரேலியா அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் தான் மொய்ன் அலி. தன்னுடைய தொழில் ரீதியான கிரிக்கெட் விளையாட்டு எந்த நிலையிலும் தன்னுடைய இபாதத்துகளை பாதித்து விட கூடாது என்பதில் தென் ஆபிரிக்காவின் ஹாசிம் ஹம்லா போன்று உறுதியாக இருக்கும் மனிதர் தான் இவர்.

அண்மையில் ஒரு நேர்காணலில் உங்களுக்கு நோன்போடு விளையாடுவதில் எந்த சிரமமும் இல்லையா என்று கேட்டதற்கு, என்னுடைய உள்ளத்தில் உள்ள இறைவன் மீதான அச்சம் அனைத்து களைப்பையும் மறகடித்துவிட்டது என்றே பதில் அளித்தார். தன்னுடைய மார்க்கம் தன்னுடைய கலாச்சாரம் என்பதில் உறுதியாக இருக்கும் மொய்ன் அலி எங்கே , தங்களை இஸ்லாமிய தேசத்தின் கிரிக்கெட் வீரர்களாக காட்டிக்கொண்டு இதே ரமலானில் மைதானத்தில் நின்றுகொண்டு தண்ணீர் அருந்திய பாகிஸ்தான், பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் எங்கே.

 

Close