அதிரை வாய்க்கால் தெரு பள்ளியில் கிருஸ்தவ வழிபாடா? முன்னால் தலைமையாசிரியர் ஹனிபா அவர்களின் விளக்கம்!

20150721045618அன்பார்ந்த அதிராம்பட்டினம் இணையதள வாசகர்களே! அனைவருக்கும் நன்றி. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிராம்பட்டினம் நிகழ்வுகளை உடனுக்குடன் வெளியிடும் செய்தி ஊடகங்களில் ஒன்று அதிரை வாய்க்கால் தெரு பள்ளியில் நடைபெறாத ஒரு நிகழ்வை நடந்ததாக கூறி பள்ளிக்கும், தொடர்புடைய ஆசிரியருக்கும், எனக்கும் கலங்கம் இழைத்துவிட்டனர்.

அதாவது S.டேவிட் என்னும் அசிரியர் கிருஸ்தவ மதம் பற்றிய கருத்துக்களை மாணவர்களுக்கு போதிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளனர். ஹனிபா என்னும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியராகிய நான் கிராமக் கல்விக் குழு, பெற்றோர் ஆசிரியர் குழு உறுப்பினராக பள்ளியில் உள்ளேன். இந்த புகாரை என்னிடம் கூறி நானும் அதற்கு எந்தவிதமான நடவடக்கையும் எடுக்கவில்லை எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தனர்.

நான் பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் கேட்டபோது, அவர் பாடல் ஒன்றை யோகா வகுப்பின் போது பாடியதாகவும் அதை என்னிடம் பாடி கண்பித்து இதில் ஏதாவது தவறு இருந்தால் கூறுங்கள் என்று கூறினார். அந்த பாடல் பின்வருமாறு

“தொடும் கண்களையே

உம்மை நான் பார்க்க வேண்டுமே!

இறைவா உன் முகத்தை பார்க்க வேண்டுமே

தொடும் என் காதுகளை 

உன் குரலில் கேட்க வேண்டுமே!

தொடும் என் நாவினையே

உன் புகழ் பாடவேண்டுமே!

தொடும் என் கைகளையே

பிறருக்கு உதவி செய்ய

தொடும் என் கால்களையே

உன் வழி பின்பற்றாவே!”

  மேற்கண்ட பாடலில் எந்த மதசார்பான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன என நான் உணரவில்லை. இதை படிக்கும் நீங்களும் அதையே உணர்வீர்கள் என நம்புகிறேன். இப்பாடலை கடந்த ஆண்டு பாடியதாகவும் தற்போது அதை நடப்பாண்டில் பாடவில்லை. எனவும் ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆகவே இனி இதுபோன்ற உண்மை தண்மையற்ற செய்திகளை நம்பவேண்டாம் என்றும், ஊடக நண்பர்களும் இதுபோன்ற செய்திகளை வெளியிட்ட சமுதாய சீர்குலைவை ஏற்பட காரணமாக இருக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இங்கனம்,

N.M.முஹம்மது ஹனிபா (ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்)

உறுப்பினர் – பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் கல்விக்குழு

 

Close