அதிரையில் சிறப்பாக நடைபெற்ற லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா (படங்கள் இணைப்பு)

adirai Ln club adiraipirai

அதிரை லயன்ஸ் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நிகழ்ச்சி இன்று மாலை 6 மணியளவில் அதிரை சாரா மண்டபத்தில் துவங்கியது. இதில் M.சாகுல் ஹமீது அவர்கள் தலைமை வகித்தார்கள்.

மேலும் 2015-2016 ஆம் ஆண்டின் தலைவர் அரிமா M.ஆறுமுகசாமி அவர்களையும், புதிய பொருப்பாளர்களையும் பணியில் அமர்த்தி PMJF அரிமா S.முஹம்மது ரஃபி அவர்கள் (முன்னால் மாவட்ட ஆளுனர்) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கருத்துரையை மண்டலத் தலைவர் V.K.K.ராமமூர்த்தி மற்றும் வட்டாரத் தலைவர் இரா.இராஜாராம் ஆகியோரும் வாழ்த்துரையை மாவட்டத் தலைவர்களான ஹாஜி S.M.முஹம்மது முஹைதீன், பேராசிரியர் மேஜர் D.S.P.கணபதி, ஹாஜி M.நெய்னா முஹம்மது பேரா.K.செய்யது அஹமது கபீர், M.அஹமது ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியை பேராசிரியர் M.A.அப்துல் காதர் அவர்கள் தன்னுடைய பாணியில் அருமையான முறையில் தொகுத்து வழங்கினார்கள்.

இதனை தொடர்ந்து 10 மற்றும் 12 ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து வள்ளியம்மை நகர் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு உணவுத் தட்டு மற்றும் குடிநீர் டம்ளர் வழங்கப்பட்டன.

இறுதியாக 8.30 மணிக்கு சுவையான விருந்து உபசரிப்புடன் இந்த நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். இவர்களின் சிறப்பான சேவைகள் சிறக்க அதிரை பிறை சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் விபரம்:

20150721055120

 

 

Close