சவூதியில் நடைபெற்ற உலக அளவிலான குர்ஆன் ஓதும் போட்டியில் இந்திய சிறுவன் சாதனை!

image

சர்வதேச குர்ஆன் ஓதுதல் போட்டியில் இந்திய சிறுவன் மூன்றாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளான்.
சவூதி அரேபியாவின் ‘ஜெத்தா’வில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச குர்ஆன் போட்டியில்,  இம்முறை மகாராஷ்டிர  மாநிலம் ‘ரத்லாம்’ என்ற ஊரை சேர்ந்த 9 வயது ‘ஹாபிஸ் முஹம்மத் உமர்’  3-வது  இடத்தை பிடித்து  சாதனை  புரிந்துள்ளார்.
ஜித்தாவில்  ஒவ்வொரு  வருடமும் இவ்வாறான  குர்ஆன்  ஓதும் போட்டி நடைபெற்று வருகிறது. அதில் இந்தியர் ஒருவர் முதல் மூன்று இடங்களில் ஒன்றை பெற்றிருப்பது இதுவே  முதல்  தடவை  ஆகும்.
இப்போட்டிகளில், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவை சேர்ந்த பலர் தொடர்ந்து பங்கு பெற்று வந்தாலும், முதல் முறையாக தற்போதுதான் இந்தியா  வெற்றிக்கனியை சுவைத்துள்ளது.
10 வயதுக்குட்பட்டோருக்கான இப்போட்டியில், 33 நாடுகளை சேர்ந்த 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 3-ம் இடம் பிடித்த முஹம்மத் உமருக்கு, உம்ரா பயண சலுகைகள், பாராட்டு சான்றுகளுடன், 20,000 சவூதி ரியால் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.
நாடு திரும்பிய இந்த சிறுவனுக்கு மக்கள் கொடுக்கும் மரியாதைதான் நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படங்கள்.

image

image

Close