மருமகள் : மறு மகள்!!!

o-PREGNANT-WOMEN-SHADOW-facebook

கணவன் மனைவி சொந்தம் இவ்வுலகில் ஈடு இணை இல்லாத சொந்தங்களில் இதுவும் ஒன்று. கணவன் மனைவி இருவரும் புரிந்து நடந்து கொண்டால் மட்டும் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று கூறுவர் பலர். ஆனால் அது மட்டும் வாழ்க்கைக்கு போதாது ஏன் என்றால் மனைவி தன் மாமியாரை எந்த விதத்திலும் தன் தாயை போல் பார்ப்பதில்லை. இது தான் இயல்பு ஒரு சில இடங்களில் ஆன் பிள்ளை மட்டும் பெற்றெடுட்ட தாய்மார்கள் படும் துயர் ஏராளம். 10 ஆன் பிள்ளை பெற்றிருந்தாலும் அவர்களின் நிலையும் இதுவே. காரணம் யாரும் கணவனின் தாயை தன் தாய் போல் கருதுவதில்லை.

ஒரு சில இடங்களில் மாமியாரை தாய் போல் கருதுபவர்கள் உண்டு ஆனால் இது ஆயிரத்தில் ஒன்று தான் மற்றவர்களின் நிலை?

தாய் தன் பிள்ளையை பிறப்பு முதல் அவன் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் பார்த்து பூரித்து போகிறாள். அவன் தவழும் அழகை ரசிக்கிறாள் அவன் தட்டு தடுமாறி நடக்கும் நடை அழகை பார்த்து ஆனந்தம் அடையக்கூடியவளாக இருக்கிறாள். பிள்ளையை வளர்த்து ஆளாக்கிய பிறகு திருமணத்தின்போது புதிய சொந்தம் வந்துடன் தாயை கண்டுகொள்ளாத ஆண்களும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மகன்களும், மருமகள்களும் இருந்தும் யாரும் இல்லாதவர்கள் போல் இருப்பவர்களை சமுகத்தில் பார்க்கத்தான் செய்கின்றோம்.

எது சரி , எது தவறு என்பதை அடிப்படையில் சொல்லி வளர்த்த தாயை தவறாக நடத்துவதையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.

சிலர் பணம், பதவி அதிகம் வந்தவுடன் தன் பெற்றோர் தன் அருகாமையில் இருப்பதை விரும்பாதவர்கள் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து குழ்ந்தையை இருந்தும் அனாதையாக வாழ்கின்றனர். தான் பெற்று வளர்ப்பதற்கு பதிலாக பிறந்தவுடன் குழந்தையை அவர்கள் எறிந்திருந்தால் அந்த குழந்தை இச்சமுகத்தில் அனாதையாக இருந்திருக்கு. அப்படி ஒரு எண்ணம் எந்த நல்ல தாய்க்கும் வந்துவிடாது. இதற்க்கு முக்கிய காரணமும் மருமகளாகத்தான் இருக்க இயலும். இவர்கள் கொடுக்கு தொல்லையை தாங்கிக்கொள்ள இயலாத கையாலாகாத மகன்கள் இதனை போன்ற கீழ்த்தர எண்ணத்துடன் இச்செயலை செய்கின்றான்.

மாமியார் நோய்வாய் பட்டிருக்கும் காலங்களில் அவர்களை நன்றாக பார்த்து கொண்டாலும் மகள் போன்ற ஒருத்தி அந்த தாயுடன் இருந்தால் அதுவே ஒரு வகையான மன தைரியத்தை கொடுக்கும். அதுவும் இன்றி பல தாய்மார்கள் அவதி படுவதை பார்க்கிறோம்.

எந்த வேளையிலும் தன் மனைவி முன்பு தாயை தரம் இறக்கி பேசிவிடவோ அவர்கள் மனமுடையுமாறு பேசிவிடவோ கூடாது. ஆனால் சமுகத்தில் தாயை தரக்குறைவாக பேசுவதை கண்ணால் காண்கிறோம்.

அவர்களின் வேதனையை யாரிடம் கூறுவார்கள்?

அவர்களின் துக்கம், மகிழ்ச்சி அனைத்தையும் தன் பிள்ளையோடு கழிக்க விரும்புவார்கள் ஆனால் கேட்பதற்கு நாதி இருக்காது இது தான் இயல்பு !

 

ஒவ்வொரு மருமகளும் தன் பிள்ளையின் மனைவிக்கு தான் ஒரு மாமியார் என்பதை சற்று நினைத்து பார்த்தாலே போதும் அவர்கள் உணர்ந்து விடுவார்கள் தனது நிலை எப்படி இருக்கும் என்று.

 

ஒவ்வொருவரும் இதனை மனதில் வைத்து நடந்து கொண்டால் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய தலைமுறை சிறப்பாக அமையும். தன் தாய் தந்தையை இறுதிவரை பேணி பாதுகாத்திட இறைவன் நமக்கு உதவி புரிவானாக.

 

 

-M.R.MOHAMED  SALIH  B.B.A., 

Close