புதிய பெட்ரோல் ,டீசல் விலை பட்டியல்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.சமீப காலமாக சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. அதையடுத்து, பெட்ரோல் விலையையும் அடிக்கடி எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. அதேபோல் டீசல் விலையும் அவ்வப்போது குறைக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25ம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று (3ஆம் தேதி) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Advertisement

Close