பெண்களுக்கான சந்தோசமான செய்தி

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.288 குறைந்துள்ளது. ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.776 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக இறங்குமுகத்தில் உள்ளது. சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை கிராம் ஒன்றுக்கு ரூ.2441 ஆக இருந்த 22 காரட் தங்கத்தின் விலை இன்று ரூ.2344 ஆக குறைந்துள்ளது.

ஒரு சவரன்  தங்கம் ரூ.18,752-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கம் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை ஒரு கிராம் 70 காசுகள் குறைந்து ரூ.36.00-க்கு விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2 குறைந்துள்ளது. கட்டி வெள்ளி கிலோ ரூ.33,625-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயர உள்ளதாக வெளியான தகவல்களே இதற்கு காரணம் என சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Close