அதிரையில் தொடரும் வட்டி! கதறும் ஏழைகள்!

‪‎அதிரையில்‬ அதிகரித்துவிட்டது இந்த பாழாப்போன வட்டி

அதிகம் ‪இஸ்லாமிய‬ மக்கள் வாழும் பகுதி இது நிறைய ஆலிம்கள் ,ஆலிமாக்கள் படித்த வாலிபர்கள் வசதி படைத்தவர்கள் அதிகம் இருக்கும் ஊர் இது. அது மட்டும் இல்லாது ‪‎அல்லாஹுடைய‬ இறை இல்லம் அதிகம் இருக்கும் ஊர் இது 

தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன அங்கு கூட அதிகம் இஸ்லாமிய பாடங்கள் கற்பிக்கபடுகிறது  இந்த வரிசையில் மதரசாக்களும் உள்ளன .இந்த ஊரில் செல்வம் செழிப்பும் குறைவில்லை இயற்கை வளம் மற்றும் அதை சார்ந்த தொழில் இப்படி என்னற்ற வசதிகள் உள்ளன. சாலை வசதி , மின்சார வசதி, குடிநீர் வசதி என போதியளவு உள்ளது 

இத்தனை வசதிகள் இருந்தும் ஒரு வேலை சாப்பாடிற்கே கஷ்டபடும் மக்களும் இருக்கின்றனர் அவர்கள் போதிய வசதி இல்லாத காரணத்தால் வேறு வழி இல்லாமல் இந்த வட்டியில் விழுந்து விடுகிறார்கள். அந்த வரிசையில் அதிகம் நம் பெண்களே 

(வட்டிக்கு விடுவதும் தப்பு வாங்குவதும் தப்பு)

அதிகம் வட்டிக்கு விடும் ஆட்கள் மாற்று மதத்தினர் அவர்கள் வீடு வரை வந்து வட்டி பணம் வசூலித்து போவது வழக்கம் நாமும் அதை பார்த்து வருகிறோம். ஆனால் ஒரு சில நபர்கள் அப்படி இல்லை வட்டி பணம் கட்ட தவறினால் வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்து செல்வதும் நாம் பார்த்து இருக்கிறோம்.

இதை விட கொடுமைகள் நமது ஊரில் பல நாட்களாக நடந்து வருகிறது அதை நாங்கள் காது கொடுத்து கேட்க முடியாத அவலம். நமதூர் ஜமாத்தார்கள் ,செல்வந்தர்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் இதனை கருத்தில்கொண்டு அவர்களை இது மாதிரி தவறான பாதைக்கு போவதை தடுக்க வேண்டும் 

எதோ உங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களையும் இந்த ஊர் மானத்தையும் (நரக வேதனை) காப்பாற்றுங்கள் 

குறிப்பு : அதிரையில் வீண்விரயம் அதிகம் ஆகி விட்டது

-நீதியின் குரல் (FACEBOOK PAGE)

Advertisement

Close