Adirai pirai
posts

அதிரையில் நெய்ல் சாக்கடை ஆறு சீர் செய்ய வக்கில்லாத வார்டு மெம்பர்…!!! ( படங்கள் இணைப்பு)

அதிரை 21 ஆம் வார்டு பகுதி ஆலடித்தெருவில் சுமார் 8 ஆண்டுகளாக சாக்கடை ஆறு போல் ஓடிக் கொண்டு இருக்கிறது அதை சீர் செய்ய வார்டு மெம்பருக்கு திராணி இல்லை

இதனால் முஹ்த்தீன் ஜூம் ஆ பள்ளிக்கு வருபவர்கள் சாக்கடையை ஆறு போல் ஓடிவது காரணமாக முகம் சுழிக்கின்றனர். ஆக நோய் பரவும் அபாயம் உள்ளது. 

ஒரு மழை பெய்தாலும் இது ஆறு போல் ஓடுகின்றது

  1.   அப்பகுதிக்கு தொழுகை வருபவர்கள் சங்கடத்துக்கு ஆளாக காரணமாகிறது
  2. இது அந்த வார்டு மெம்பர் அதாவது 21 ஆம் வார்டு மெம்பரின் அலட்சிய போக்கை காண்பிக்கிறது
  3. இது புனித அல்லாஹ் வின் விட்டு பகுதியை அசுத்தம் செய்கிறது. 

   ஆக அதை சுத்தம் செய்ய வருபவரகள் அதை முறையாக சீர் செய்ய முடியாதவர்களாக உள்ளனர்
ஆக அதை விரைந்து முறையாக சீர் செய்து முற்றுப்புள்ளி வைக்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

இது போல் அலட்சியம் உள்ளவர்களை தங்களுடைய வார்டு மெம்பராக தேர்வு செய்ய வேண்டாம் என்றும் தகுதி உள்ளவர்களை தேர்வு செய்ய வேண்டி அதிரை அனைத்து வார்டு மக்களுக்கும் அதிரை பிறை சார்பாக உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்

  

 

 

  
    
    

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy