துபாயில் இருந்து திரும்பிய நாகசாமியின் தவறிய பார்சலை ஒப்படைத்த ஜாஹிர் ஹுசைனின் நேர்மை!

துபாயிலிருந்து விடுமுறையில் திரும்பிய நாகசாமி முருகவேல் என்பவர் தனது வாகனத்திலிருந்து தவறவிட்ட பார்சலை மீட்டு பாஸ்போர்ட் எண் மூலம் அறிந்து அவரிடமே ஒப்படைத்த ஜாஹிர் ஹுசைன் என்பவரின் நேர்மையை அப்பகுதி மக்கள் பாராட்டினர். கீழக்கரையை சேர்ந்தவர் ஜாஹிர் ஹுசைன் இவர்  ராவியத் சுவீட் கடை வைத்துள்ளார். இவர் ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை நோக்கி வாகனத்தில் சென்ற போது இவரது வாகனத்துத்துக்கு முன்பாக சென்ற காரின் மேற்புரத்திலிருந்து பெரிய அட்டை பெட்டியால் கவர் செய்யப்பட்ட பார்சல் தவறி விழுவதையும் அதனை கவனிக்காமல் அந்த கார் வேகமாக செல்வதையும் கண்டார். இவர் தனது வாகனத்தை நிறுத்தி அந்த பார்சலை எடுத்து பத்திரப்படுத்தி ஊர் திரும்பினார்.

அதில் இருந்த‌ டிவி உள்ளிட்ட பொருட்கள் முறையாக பேக்கிங் செய்யப்பட்டதால் சேதமாகம‌ல் இருந்தது. அப்பார்சலில் பெயரும் பாஸ்போர்ட் எண்ணும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை வைத்து இப்பார்சலின் உரிமையாளர் சிவகாமிபுரத்தை சேர்ந்த  நாகசாமி முருகவேல் என்பது தெரிந்தது. உடனடியாக ஜாஹிர் ஹுசைன் தகவல் தெரிவித்ததில் நாகசாமி முருகவேல் தனது குடும்பத்துடன் கீழக்கரை வந்து ஜாஹிர் ஹுசைனிடமிருந்து பார்சலை பெற்று கொண்டார். நாகசாமி முருகவேல் விடுமுறையில் துபாயிலிருந்து இப்பார்சலை கொண்டு வந்தாராம் தனது வெளிநாட்டு உழைப்பில் சேமிப்பில் வாங்கிய  பொருட்கள் திரும்ப கிடைத்ததில் மிகுந்த மன மகிழ்ச்சியோடு ஜாஹிர் ஹீசைனுக்கு மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டார். பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்த ஜாஹிரின் நேர்மையை அப்பகுதியில் உள்ளவர்கள் பாராட்டினர்.

-தினகரன்

Close