தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட யாக்கூப் மேமனின் பேட்டி

image

எங்கள் குடும்பம் கராச்சி வழியே துபாய் செல்லும் விமானத்தில் மும்பையில் ஏறி துபாய்க்குத்தான் போனோம். ஆனால், கராச்சியில் ஒரு பாக் ஏஜன்ட் மூலமாக வலுக்கட்டாயமாக இறக்கப்பட்டு எவ்வித விஸா ஸ்டாம்பிங் இமிக்ரேஷன் கிளியரன்ஸ் ஏதுமின்றி வெளியேற்றப்பட்டோம். அவ்வூரிலேயே ஏஜென்டின் பங்களாவில் தங்க வைக்கப்பட்டோம். குண்டுவெடிப்பு குற்றம் சாட்டப்பட்ட (அக்கியூஸ்ட்) டைகர் மேமன், என் சொந்த அண்ணனேயானாலும்… சிறுவயதிலிருந்து ஒரே வீட்டில் வளர்ந்தே இருந்தாலும்… துபையில் சட்டத்துக்கு புறம்பான கடத்தல் பிசினஸ் செய்யும் அவனோடு… என் வாழ்நாளில் மொத்தமாக… ஒரே ஒரு மணி நேரம் மட்டுமே பேசி இருப்பேன். இவனின் அக்கவுண்ட் பணப்பட்டுவாடா கணக்கு வழக்குகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை. குண்டுவெடிப்பு குற்றம் சாட்டப்பட்ட (இன்னொரு அக்கியூஸ்ட்)தாவூத் இப்ராஹிமை என் வாழ்நாளில் நான் சந்தித்ததே கிடையாது… இவர்களும் பாகிஸ்தான் அரசும் ISI ஏஜண்டான தவ்ஃபிக்கும் தான் மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமாக இருந்தவர்கள். நான் இந்த உண்மைகளை சொல்ல வந்திருக்கிறேன். மக்கள் முடிவு செய்துகொள்ளட்டும்..”
————————————————யாகூப் மேமன் பேட்டி..!

https://youtu.be/dwyfqeTJJAo

Close