பட்டுக்கோட்டையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் காதிர் முகைதீன் பள்ளி மாணவர்கள் வெற்றி!(படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான உலக உடற் திறனாய்வு தேர்வு (WORLD BATTERY TEST) 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த 29-1-2015 வியாழக்கிழமை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது .இதில் நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு  வெற்றி பெற்றனர்.

இதில் :
1.அப்சர் கான் 6ம் வகுப்பு -100 மீ ஓட்ட போட்டியில் முதலிடம் 
2.அப்சர்  6ம் வகுப்பு- உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடம் 
3.அஜ்மல் கான்  7ம் வகுப்பு-200 மீ ஓட்ட போட்டியில் இரண்டாமிடம் 
4.முரளிதரன்  7ம் வகுப்பு- நீளம் தாண்டுதல் முதலிடம் மற்றும் 100 மீ ஓட்ட போட்டியில் மூன்றாமிடம்
5.முத்துராசு 7ம் வகுப்பு-400 மீ ஓட்ட போட்டியில் முதலிடம் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடம் 
6.முஷாரப் -100 மீ ஓட்ட போட்டியில் இரண்டாமிடம் பெற்றனர் .

மேலும் இந்த மாணவர்கள் மண்டல அளவிலான உலக உடற் திறனாய்வு தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். 

இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று காலை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளியின் தலைமையாசிரியர் ஹாஜி ஏ. மஹபூப் அலி. பெற்றோர் ஆசிரியர் கழக துணை செயலாளர்  M.A.முஹம்மது தமிம்,உறுப்பினர் N.அபுதாகிர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் போன வருடம் மண்டல அளவிலான போட்டியில் காதிர் முகைதீன் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று அரசின் ஊக்கதொகை பெற்று உள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது . 

செய்தி மற்றும் படங்கள்:
காலித் அஹ்மத்

Advertisement

Close