அதிரையில் சிறப்பாக நடைபெற்ற புற்றுநோய் கண்டறிதல் முகாம்!(படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தஞ்சாவூர் கேன்சர் சென்டர் இணைந்து நடத்திய புற்றுநோய் கண்டறிதல் முகாம் இன்று (31-01-2015) (சனிக்கிழமை) காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.  

முன்னதாக திரு.கணபதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள் . இதனை தொடர்ந்து டாக்டர்.பாலாகிருஷ்ணன்,டாக்டர்.ஹக்கீம், டாக்டர்.மருது துரை, டாக்டர்.கௌசல்யா ராமகிருஷ்ணன் ,டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் . அனிதா ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டார்கள் .மேலும் பொதுமக்கள் புற்று நோய் பற்றி கேட்ட கேள்விகளுக்கு டாக்டர்கள் பதில் அளித்தார்கள். மேலும் இம்முகாமில் அதிரை C.M.P.லைனை சேர்ந்த டாக்டர்.காமில் MBBS அவர்களும்  கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.  

மேலும் முகாமில் 100 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர் . ஒவ்வொரு நபர்களுக்கும் புற்று நோய் அறிகுறிகள் மற்றும் புற்று நோயை எப்படி தடுப்பது என்றும் டாக்டர்கள் விளக்கினார்கள் . பெண்களுக்கு சிறப்பு பெண் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டது.

இம்முகாமை ஏற்படுத்திய அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தஞ்சாவூர் கேன்சர் சென்டர் மற்றும் இம்முகாமிற்கு உதவியாக இருந்த காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள்,  பள்ளி மற்றும் கல்லூரி மாணவ ,மாணவிகளுக்கும் அதிரை பிறை சார்ப்பாக நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
செய்தி மற்றும் படங்கள்:
முஹம்மத் பிலால் 

Advertisement

Close