அதிரை வழியாக செல்லும் ரயில்வே பணி 138 கோடி செலவில் விரைவில் துவங்கும்!

image

கடந்த ரெயில்வே பட் ஜெட்டில் திருவாரூர்- காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிதியை கொண்டு அகல பாதை பணி கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருவா ரூர் ரெயில் நிலையத்தில் கட்டுமான பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்த பணிகளை டாக்டர்.கே. கோபால் எம்.பி. நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். அப்போது 5-வது நடைமேடையை விரிவாக்கம் செய்யும் பணி, முதல் நடை மேடையில் சிமெண்டு தளம் அமைக்கும் பணி, தண்ணீர் குழாய்கள் அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்ட அவர், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறி வுறுத்தினார்.

ஆய்வு குறித்து கோபால் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறிய தாவது:-
விரைவில் தொடங்கும்

பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்திய தன்பேரில் திருவாரூர்- காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை அமைப்பதற்கு ரூ.138 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் விரைவுபடுத்தப்பட்டு இருக் கின்றன. முதல் கட்டமாக இந்த வழித்தடத்தில் தேவை யான அளவுக்கு சிறு, சிறு பாலங்கள் கட்டப்பட்டு வரு கின்றன. தேவைப்படும் இடங் களில் பெரியபாலங்களை அமைக்கும் பணிகள் விரை வில் தொடங்கும். 18 முதல் 20 மாதங்களில் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதால் திருவாரூர்- காரைக்குடி இடையே விரை வில் ரெயில் போக்குவரத்து தொடங்கும்.

மன்னை-சென்னை விரைவு ரெயிலை அறிவித்தபடி திரு வாரூர் வழியாக இயக்குவதற்கு ரெயில்வே துறையை வலி யுறுத்தி வருகிறோம். இந்த ரெயிலை திருவாரூர் வழியாக இயக்க நடவடிக்கை எடுப்ப தாக ரெயில்வேதுறை உயர் அதிகாரிகள் உறுதி அளித்து இருக்கிறார்கள்.

இவ்வாறு கோபால் எம்.பி. கூறினார்.
திருவாரூர் வழியாக கூடுதல் ரெயில்கள்
முன்னதாக காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவாரூர் ரெயில் நிலையம் வழியாக எந்த ரெயிலும் இயக் கப்படாதது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த எம்.பி., இந்த வழித்தடத்தில் போதிய வருமானம் இல்லாத தால் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படவில்லை என கூறு கிறார்கள். ரெயில்வே துறை பயணிகளின் நன்மையை கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர வருமானத்தை கருத்தில் கொள்ள கூடாது என்பதையும், ரெயில்வேதுறை ஒரு சேவை நிறுவனம் என்பதனையும் கருத்தில் கொண்டு திருவாரூர் வழியாக கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று கூறினார்.

பேட்டியின்போது ரெயில்வே கட்டுமான பிரிவு திருச்சி கோட்ட துணை முதன்மை பொறியாளர் திரு மலை, நிர்வாக பொறியாளர் செல்வராஜ், இளநிலை பொறி யாளர்கள் எட்வின் செல்வம், புஷ்பராஜ், நிலைய மேலாளர் தர்மன் ஆகியோர் உடன் இருந்தனர்.

நன்றி: தினத்தந்தி

Close