சவூதியில் சுட்டெறிக்கும் வெயில்! 2 நாட்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தல்!

A_journey-730x370

 

சவுதியில் வெப்ப நிலை பாரிய அளவில் உயர்ந்துள்ளதாகவும், இந்நிலை இரண்டு நாளைக்கு நீடிக்கும் எனவும் சவுதி வளிமண்டலவியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது.

மேலும் சூரிய வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் வெளியில் வருவதை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சவூதியின் பெரும்பாலான பகுதிகளில் சூரிய வெப்பம் கடும் உச்சத்தை எட்டும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சவுதி தொழில் அமைச்சு (கபீல்) ஸ்பான்சர்களை வலியுறித்தி உள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் தொழிலார்களை வேலைக்கு அமர்த்துவது சட்டமீறல் என தெரிவித்துள்ள அமைச்சு, குறித்த சட்ட மீறல்களில் ஈடுபடுவோர் தொடர்ப்பில் 19911 என்ற இலக்கத்துடன் தொடர்ப்பு கொண்டு அறிய தருமாறு தெரிவித்துள்ளது.
நன்றி: மக்கள் நண்பன்

Close