அப்துல் கலாம் அடக்கப்பட்ட இடத்தில் திருக்குர்ஆன் ஓத ஏற்பாடு செய்ய மோடியிடம் கலாமின் சகோதரர் வேண்டுகோள்!

MMQஅப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், தினசரி ஓரிரு நிமிடங்கள் திருக்குரான் ஓத ஏற்பாடு செய்ய வேண்டும் என பிரதமர் மோடியிடம், கலாமின் சகோதரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்துல் கலாமின் இறுதிச்சடங்கில், பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயரிடம் சென்று, ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது பிரதமரிடம் பேசிய மரைக்காயர், கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தினந்தோறும் சில நிமிடங்கள் திருக்குரான் ஓத ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதற்கு ஆவன செய்வதாக பிரதமரும் உறுதியளித்தாக கூறப்படுகிறது.

Close