Adirai pirai
islam தமிழகம்

ஆம்பூர் முஸ்லிம் இளைஞரை கொலை செய்த இன்ஸ்பெக்டர் மார்ட்டின் ப்ரேம்ராஜ் கைது (வீடியோ)

mnஇன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் ஆம்பூரில் அப்பாவி முஸ்லிம் இளைஞர் ஒருவரை சட்ட விரோதக் காவலில் வைத்து அடித்து அவர் சாவதற்குக் காரணமாக இருந்தார்.


இன்ஸ்பெக்டர் மார்ட்டின் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பயந்து தப்பி ஓடி தலைமறைவாக இருந்தார். ஆம்பூர் வாலிபர் ஷமில் அகமதுவின் உறவினர்கள் அளித்த புகாரில் பள்ளிகொண்டா போலீஸ் குடியிருப்பு வீட்டில் வைத்து தான் ஷமில்அகமதுவை இன்ஸ்பெக்டர் தாக்கினார் என தெரிவித்திருந்தனர்.

இதனால் வீட்டை பூட்டிய சி.பி.சி.ஐ.டி. போலீசார் சீல் வைத்து தலைமறைவான இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜை தேடிவந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த மார்டின் பிரேம்ராஜ் கைது செய்யபட்டார்.

நாகர்கோவில் அருகே ஒரு காட்டுப் பகுதியில் அவர் உல்லாசமாக மான் வேட்டை ஆடிக் கொண்டிருந்தபோது கைது செய்யபட்டுள்ளார். அவரிடமிருந்து மான் இறைச்சிகளும், துப்பாக்கிகளும் கைப்பற்றபட்டுள்ளது. மேலும் விபரம் வீடியோவில்…