Adirai pirai
islam தமிழகம்

சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்ற SDPI கட்சியின் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

11796468_841530242582353_5007420742677720458_nஎஸ்.டி.பி.ஐ கட்சியின் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 31/07/2015 அன்று சென்னை புரசைவாக்கம் ஜவஹர் கிரண்ட் பேலஸில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் வரவேற்புரையாற்றினார். மேலும் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீது, மாநில துணைத் தலைவர்கள் நெல்லை முபாரக், அம்ஜத் பாஷா, மாநில பொருளாளர் ரஃபீக் அகமது, மாநில செயலாளர்கள் ரத்தினம், அப்துல் சத்தார், உஸ்மான் கான் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் கவிக்கோ அப்துல் ரஹ்மான், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முகம்மது இஸ்மாயில், முன்னாள் காங்கிரஸ் எம்.பி ஜே.எம்.ஹாரூன், மதசார்பற்ற ஜனதாளம் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.முத்துக்கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. பி.கே.சேகர்பாபு, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் இனிகோ இருதயராஜ், இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் முகம்மது ஹனிபா, இந்திய தேசிய லீக் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன், ஐ.என்.டி.ஜே மாநில துணைத் தலைவர் முகம்மது முனீர், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எஸ்.என்.சிக்கந்தர், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்கின் தலைவர் அ.ச.உமர் ஃபரூக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இறுதியாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்சா நன்றியுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 2500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.