இந்தியாவில் வெளியில் உள்ளவர்களை விட சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களே அதிகம் – இந்தியா டுடே

11813293_1017641654942903_5022719761783314107_nவெளியே குறைவு உள்ளே அதிகம்

இந்த தேசத்தில் 13 சதவீதம் வாழும் சிறுபான்மை ”முஸ்லிம் சமூகம், சிறை எண்ணிக்கையில் 21 சதவீதமாக உயர்ந்து நிற்பது வேதனையான விஷயம்” என்று தெரிவித்திருந்தார் நீதியரசர் ராஜீந்தர சச்சார். இந்தியாவில் மொத்தம் உள்ள
சிறைச்சாலைகளின் எண்ணிக்கை 1382.
மொத்த கைதிகளின் எண்ணிக்கை 3,72,296.
இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 21% ஆகும்.

கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியா டுடே பத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வின் முடிவில் “இந்தியாவில் வாழும் முஸ்லிமாக இருந்தால் நீங்கள் சிறையில் இருக்கும் அபாயம் இரண்டு மடங்கு அதிகம் என்று தெரிவித்தது.

காஷ்மீர்,புதுச்சேரி,சிக்கிம் தவிர நாட்டின் பிற அனைத்து பகுதிகளிலும், ஜனத்தொகையை விட அதிக விகிதத்தில் முஸ்லிம் மக்கள் சிறையில் இருகிறார்கள்.
நூல்:இந்தியா டுடே டிசம்பர் 26, 2012

முஸ்லிம்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பின்தங்கியிருப்பதன் காரணமாக, தங்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளில் இருந்து தங்களை விடுவித்து கொள்ள கூட தெரியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் விலாவாரியாக அலசியுள்ளது இந்தியா டுடே !டிசம்பர் 26, 2012

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் படி 2012 செப்டம்பர் 22 வரை உபி காசியாபாத் சிறையில் விசாரணை கைதிகள் 1222 இதில் 530 பேர் முஸ்லிம்கள்.இந்த ஆய்வுக்கு உட்பட்ட கைதிகள் பயங்கரவாத செயலில் எந்த பங்கும் இல்லாதவர்.(இந்தியா டுடே !டிசம்பர் 26, 2012)

ஆங்கிலேயர்களை விரட்டியடித்த ஒரு சமுதாயம் இன்று குற்றப் பின்னணியோடு வாழ்ந்து வருகிறது. இந்த நாட்டின் விடுதலைக்காக தன்னுயிரை நீத்து, சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த வாரிசுகளின் நிலைமை இன்று சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றது.

இறைவனிடம் பிரார்த்திப்போம்…
எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! அல்குரான் 2:250
Editor Alaudeen

Close