Adirai pirai
articles

பொய்யை பரப்பும் பாவத்தை பங்கு போட்டுக்கொள்ளும் வாட்ஸ்அப், பேஸ்புக் வாதிகள்

 

Lie-stampAPJ  அப்துல் கலாம் ஐயா இறந்ததற்கு பிறகு ஒரு சிலர்  உருவாக்கிய சில பொய்யான தகவல்களை சிந்திக்காமல் பரப்பிய சில  வதந்திகள்…
❌ அப்துல் கலாம் இறுதிச்சடங்கிற்கு ஒபாமா  ராமேஸ்வரம் வருகிறார். என்று பொய்யான தகவல்களை பரப்பினர்.
❌ முதல் முறையாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் அவர்கள் நாட்டுக் கொடியை  அப்துல் கலாம் இறந்ததற்காக அரை கம்பத்தில் பறக்க விட்டனர் என்று ஒரு பொய்யான போட்டோ வை பரப்பினர். அந்த சம்பவம் 10 நாட்களுக்கு முன்பு அமெரிக்க படை வீரர்கள் சுட்டு கொல்லப்பட்டதற்க்காக அரைக் கம்பத்தில் பறக்கவிட்டனர்.அது தெரியாமல்.
❌ அப்துல் கலாமின் பிறந்தநாள் Oct 15 என்று  கூட தெரியாமல் Oct 31 அவர் பிறந்தநாள் என்றும் அன்றைய தினத்தை WORLD STUDENTS DAY வாக கொண்டாட வேண்டும் என்று பொய்யாக பரப்பி , எவனோ ஒரு பாவ பட்ட ஒருத்தனின் Mobile Number ஐ கொடுத்து மிஸ்டு கால் கொடுங்கள் என்று கூறி பரப்பினர்.
❌ 2010 ஆம் ஆண்டே அவர் பிறந்தநாளை WORLD STUDENTS DAY வாக கொண்டாட அனுமதிக்கபட்டது. அது கூட தெரியாமல் Forward செய்கின்றனர்.
❌ இளையராஜா காமராஜர் திரைப்படத்திற்காக 2014 ம் ஆண்டு பாடிய பாடலை. Download செய்து அப்துல் கலாமிற்க்காக பாடினார் என்று உருவாக்கி பொய்யான தகவல்களை பரப்பினர்.

துயர சம்பவம் நிகழ்ந்ததிலிருந்து எத்தனை உண்மையற்ற வதந்திகள் ..

❌2007-ல் கலாம்  தவறி விழுந்ததை எடுத்துப் போட்டு, இதுதான் அவரது கடைசி  என்றனர்!

❌ஏதோ ஒரு குட்டிப்பையனின் ஃபோட்டோவை எடுத்துப் போட்டு, இதுதான் சின்ன வயது கலாமின் புகைப்படம்! என்றனர்.

செய்திகளை முந்தித்தர விழைகிறோமா இல்லை ஏதாவது பரபரப்புச் செய்திக்கு அலைகிறோமா?

இது தவிர மதம் சார்ந்த சர்ச்சைகள் தனிக் கச்சேரி.
ஒரு தகவலை பொய்யாக உருவாக்கி,(Proud to be an Tamilan) தமிழனாக இருந்தால் Share செய்யவும் . தமிழன் ங்கிற வார்த்தையை எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் .

அன்பு கூர்ந்து
இனிமேல் உறுதிசெய்யாமல்  எதையும் Share செய்ய வேண்டாம். ஏனெனில் நாளை வேறொரு விடயத்தில் பாதிக்கப்படுவோர் நாமாகவும் இருக்கலாம்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy