சவூதி ரியாத்தில் கடும் மணல் புயல் (படங்கள் இணைப்பு)

11233253_872734036148781_5620853554700467908_nசவூதி ரியாத்தில் கடும் மணற் புயல் நேற்று ஏர்பட்டது. இதனால் முழுவானத்தையும் மணல் பரந்து மறைத்துள்ளதுடன் வானம் மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தது. இதனால் வெளியே வர முடியாமல் மக்கள் தவித்துள்ளனர். மேலும் இதனால் பகல் நேரத்தில் முன்விளக்குகளை எரிய விட்டபடி வாகன ஓட்டிகள் செல்கின்றனார். கிங்க் ஃபஹத் சாலை, குரைஷ் சாலை, ரியாத் – மக்கா நெடுஞ்சாலை, ரியாத் – மதினா நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மணற் புயல் தீவிரமாக உள்ளது.

இதனால்  சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் கிங்க் காலித் சர்வதேச நிலையத்திற்க்கு வரும் விமான போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை துறை சார்ந்த நிர்வாகிகள் அரப் நியூஸ் செய்தியாளரிடம் கூறியுள்ளார்.

-ARAB NEWS

தமிழாக்கம்: அதிரை பிறை

Close