பரபரப்பான விமானநிலையம் ஆனது துபாய்!

துபாய்: கடந்த ஆண்டில் 7.05
கோடி பயணிகள் துபாய் விமான
நிலையத்துக்கு வந்து சென்றுள்ளனர்.
இது 2013ம் ஆண்டை விட 6.1 சதவீதம்
அதிகமாகும். இதன்மூலம், லண்டனின்
ஹீத்ரூ விமான நிலையத்தை விட பரபரப்பான விமான நிலையம் என்ற
பெயரை முதல் முறையாக துபாய் சர்வதேச
விமான நிலையம் பெற்றுள்ளது.
ஹீத்ரூ விமான நிலையத்தில் கடந்த
ஆண்டில் 6.81 கோடி பயணிகள் கடந்த
ஆண்டில் வந்து சென்றுள்ளனர். ஹீத்ரூவில் உள்ள வசதி குறைபாடுகள்
காரணமாக 350 ஆண்டுகளாக இருந்த
பெருமை தற்போது துபாய்க்கு சென்று
விட்டது என ஹீத்ரூ விமான நிலைய
அதிகாரிகள் கூறினர்.

Close