அதிரை C.M.P. லேனில் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து (படங்கள் இணைப்பு)

image

அதிரை CMP லேன் சாலை CMP மெடிக்கல் எதிரில் உள்ள மின்கம்பத்தில் கடந்த பல நாட்களாக பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று இரவு அந்த மின்கம்பத்தில் பயங்கர சத்தம் ஏற்பட்டது. இதனை அடுத்து அருகில் உள்ள மக்கள் வந்து பார்த்ததில் மின்கம்பிகள் உரசியதால் இந்த கம்பிகள் அறுந்து கீழே விழ்ந்தன. இதனால் மின்கம்பத்தில் தீ பற்றி எறிந்தது. இதனால் பதற்றமடைந்த மக்கள் மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டு அழைத்தனர். இதனை அடுத்து பாதிகாப்பு கருதி மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. தற்பொது மின்வாரிய ஊழியர்கள் பழுதுகளை சரி பார்த்து வருகின்றனர்.

image

படங்கள் மற்றும் செய்தி: இர்ஷாத்

Close