Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் ரெட் கிராஸ் நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சப் கமிட்டி மற்றும் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தானம் முகாம் எதிர்வரும் [ 06-08-2015 ] அன்று காலை 9 மணி முதல் அதிரை காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள செல்லியம்மன் சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தன்னார்வலர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமுதாய அமைப்புகளில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் ஆகியோர் திரளாக கலந்துகொண்டு குருதிக்கொடையை வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலதிக தகவல் மற்றும் இரத்த தானம் செய்ய விரும்புவோர்
ரெட் கிராஸ் அதிரை சேர்மன் ‘மரைக்கா’ இத்ரீஸ் அவர்களை 9043140142என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சப் கமிட்டி சார்பில் இரத்த தானம் முகாம் குறித்து வெளியிடப்பட்டுள்ள ஃப்ளக்ஸ் பேனர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது..

image