SDPI கட்சி நடத்திய மதுவிற்க்கு எதிரான போரட்டத்தில் பலர் கைது


சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியின் தஞ்சைத் தெற்கு மாவட்ட பட்டுக்கோட்டை தொகுதி சார்பாக மதுக்கடை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதை தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z.முகம்மது இலியாஸ் அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார். இதில் டாஸ்மாக் கடைக்கு எதிராகவும்,மதுவிலக்கை அமல்படுத்த வேண்டியும் கண்டன கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் அதிராம்பட்டினம்,மதுக்கூர், வீரக்குறிச்சி,பட்டுக்கோட்டை மற்றும் ஏரிபுரக்கரை நிர்வாகிகள்,செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 90க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் முடிவு அல்ல தமிழகத்தில் மதுக்கடைகளை அகற்றும் வரை SDPI-கட்சியின் போராட்டம் தொடரும்…..

Close