டெல்லி பாராளமன்ற வளாகத்தில் 50க்கும் மேற்பட்டோர் இஸ்லாத்தை ஏற்றனர்

பாராளுமன்ற வளாகத்தில் 50 க்கும் மேற்பட்டோர் இஸ்லாமிய மார்க்கத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பான முழு விவரம் பின்வருமாறு….

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்திலுள்ள பகானா கிராம மக்கள் தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற காரணத்தினால் தீண்டாமை கொடுமையில் திளைப்பதாக கூறி பாராளுமன்றத்திற்கும் வெளியே இஸ்லாத்தை ஏற்பதாக அறிவித்தனர்.

அதனையடுத்து அப்பகுதி முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

அதையும் தாண்டி 50 க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு அவர்கள் அறிவித்தபடியே கலிமா சொல்லி இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் அனைவரும் உளூ செய்து செய்து தொழுகையையும் நிறைவு செய்தனர்.

காவல்துறையின் அச்சுறுத்தலையும் மீறி முஸ்லிம்கள் சிலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மேற்படி இஸ்லாத்தை ஏற்ற மக்களை வரவேற்றனர்.

இந்த சம்பவத்தை இந்திய ஊடகங்கள் திட்டமிட்டே மறைத்துள்ளது. இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் உதவி : மறுப்பு

image

Close