நிம்மதி

images

 

ஒரு வயதில் அழும் வாய்க்கு பால் கிடைத்தால் நிம்மதி

இரண்டு வயதில் தாவும் கைகளுக்கு டாய் கிடைத்தால் நிம்மதி

பத்தாம் வயதில் பற்றி கடிக்க பல் முளைத்தால் நிம்மதி

இருபதாம் வயதில் அறுபது போல் உள்ள அறிவின் முதிர்ச்சி நிம்மதி

முப்பதாம் வயதில் இல்லற வாழ்வின் நறுமணத்தை முகர்ந்தால் நிம்மதி

நாற்பது வயதில் கனவை நினைவாக்க கடினமாக உழைத்தால் நிம்மதி

ஐம்பதில் இருவதை போல் மனதை வைத்துக்கொண்டால் மலரும் நிம்மதி

அறுபதில் தொழில், குடும்பம், சுற்றம் இவை அனைத்தையும் பேரளவுக்கல்ல
பெரும் அளவிற்கு திருப்தி படுத்தினால் பெருகும் நிம்மதி

எழுபதில் உடலையும், உள்ளத்தையும் தள்ளாடாமல் வசீகரப்படுத்தி வைத்தால் வரும் நிம்மதி

ஆனால் அனைத்திற்கும் மேலாக பிறந்த மார்க்கம் இஸ்லாத்தில் இருந்து இறந்தால்
இன்ஷாஅல்லாஹ் நிரந்தர நிம்மதி.

ராஸிக் அஹ்மத்

Close