மும்பை மருத்துவமனைகளில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய அனுமதி

மும்பை மருத்துவமனைகளில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர்கள் இனி பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் பர்தாவை கழற்ற வேண்டிய அவசியம் இல்லை. அது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை மாநகராட்சி அனைத்து மருத்துவமனைகளுக்கும்
அனுப்பி உள்ளது. பாதுகாப்பு காரணத்துக்காக பரிசோதனை நடத்த வேண் டும் என்ற கட்டாயம் ஏற்படும் பட்சத்தில் மட்டும் பெண் போலீஸ் அல்லது பெண் காவலர் உதவியுடன் பர்தாவை அகற்றி சோதனை செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளுக்கு வரும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் பர்தாவை அகற்றும் படி கூற வேண்டாம் என அனைத்து மருத்துவமனைகளின் பாதுகாப்பு
அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு அவர்களின் பர்தாவை அகற்றக்கூறுவது பெண்களை அவமதிப்பு செய்வது போல் ஆகிவிடும் என மாநகராட்சி கூடுதல் கமிஷனர் சஞ்சய் தேஷ்முக் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் எம்.எல்.ஏ அமீன் பாட்டீல் தலைமையில் ஏராளமான கவுன்சிலர்களும் 30
முஸ்லீம் பெண்களும் இப்பிரச்னை தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை நோில் சந்தித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

முல்லுண்டில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையில் மருந்து வாங்க சென்ற முஸ்லிம் பெண்ணை இது போன்று காவலாளிகள் சோதனை என்ற பெயரில் அவரது பர்தாவை அகற்றச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். அந்த பெண் பர்தாவை அகற்ற மறுத்ததால் அவர் மருந்து கூட வாங்காமல் திரும்பி சென்று விட்டார். அது
மட்டுமல்ல அந்த பெண் அதன்பின் மருத்துவமனைக்கு செல்லவே பயப்படுகிறாள் என மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்த முஸ்லீம் பெண்கள் தெரிவித்தனர்.

எங்களது மத வழக்கப்படி பொது இடத்தில் பெண்கள் அணிந்திருக்கும் பர்தாவை கழற்றக்கூடாது. ஆனால் பாதுகாப்புக்கு தேவைப்படும் பட்சத் தில் முகத்திரையை மட்டும் அகற்றலாம். அதை விட்டு பர்தாவை முற்றிலும் கழற்ற வேண்டும் என கூறுவது ஒருவரது உடைகளை களைவதற்கு சமம் ஆகும் என முகமதலி ரோட்டில் உள்ள பெண் கவுன்சிலர் வாக்குர் நிஷா அன்சாரி என்பவர் கூறினார்.பர்தாவை அகற்றச் செய்வதற்கு தடைவிதிக்கும் படி நீண்ட நாட்களாக நாங்கள் கேட்டு வந்தோம் இப்போது அதற்கு மநாகராட்சி அனுமதி அளித்திருப்பது எங்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் கூறினார்.

Close