அதிரை அருகே ஓர் அக்குபஞ்சர் டாக்டர்

இதுவோர் பரிந்துரையே அன்றி வர்த்தக விளம்பரமல்ல!

ரம்மியமான ஒரு மாலை பொழுதில், சிலுசிலுவென தூவிய சாரலில் இன்பமாய் நனைந்த நிலையில் ‘முஹமது ரஃபி’ என்ற இந்த இளைஞரை அவரது அறந்தாங்கி வீட்டில் சந்தித்தோம், ஏன்?

மாற்றுவழி மருத்துவமாக உலகிற்கு அறிமுகமான ஆங்கில மருத்துவம் இயற்கை மருத்துவ முறைகளை பின்னுக்குத் தள்ளி, பக்கவிளைவுகள், பொருளாதார விரயம், வலியுடன் கூடிய ரண சிகிச்சை, அலைச்சல் என பல தீமைகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் இன்றைய உலகில் மனிதர்களால் முதன்மை  மருத்துவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது மனித முரணே.

நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், உணவே மருந்து, ரெய்கி, மூலிகை மருத்துவம், உடற்பயிற்சி போன்று பக்க விளைவுகள் அற்ற, பணத்திற்கும் உடலுக்கும் பாதுகாப்பான மருத்துவ முறைகளில் ஒன்றே சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவம். (தொடு அக்குபஞ்சர் மருத்துவம் என்ற பெயரிலும், ஒரு சில நாள் மட்டும் அக்குபஞ்சர் மருத்துவத்தை கற்று விட்டும் பல போலிகள் உலா வருவது குறித்தும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது) இவர் அந்த தொட்டு விளையாட்டு மருத்துவரல்ல மாறாக சித்த வைத்திய பரம்பரையில் பிறந்து தனது தந்தையுடன் மும்பையில் மருத்துவ தொழில் செய்து கொண்டிருக்கையில், மும்பை மாநகரில்,

https://www.barefootacupuncturists.com/en/the-project.html

“THE BAREFOOT ACUPUNCTURISTS PROJECT” என்ற சர்வதேச திட்டத்தின் கீழ் உலகின் தலைசிறந்த வெளிநாட்டு அக்குபஞ்சர் மருத்துவர்களிடம் நேரடியாக பயின்றவர். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அக்குபஞ்சரிஸ்டாக பணியாற்றியவர்.

https://www.barefootacupuncturists.com/en/about-us.html

இலங்கையில் சில ஆண்டுகளாக பல்வேறு அக்குபஞ்சர் மருத்துவ முகாம்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார், கற்று கொள்வதற்கு மிக எளிமையான அக்குபஞ்சர் மருத்துவத்தை கற்றுத் தருவதற்கும் அவர் தயாராகவுள்ளார்.

மேலும் இந்த மருந்தில்லா மருத்துவத்தின் மூலம் ‘மூட்டு வலி’, கை கால் கடுப்பு, கழுத்து பிடிப்பு, முதுகுவலி, குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என பல்வேறு நோய்களுக்கும் இந்த சீன குத்தூசி வைத்திய முறையின் மூலம் தீர்வு காண்கிறார், அத்தகைய தீர்வுகளும் அல்லாஹ்வின் நாட்டத்தால் மட்டுமே ஏற்படுகின்றன என்பதையும் சேர்த்து சொல்ல அவர் மறப்பதில்லை.

பல்லாயிரக்கணக்கில் செலவு செய்தும் ஊர் ஊராக சென்றும் அல்லோபதி (ஆங்கில) வைத்தியம் பார்க்கத் தயாராகவுள்ள நாம் ஏன் இந்த எளிய, பொருளாதார விரயமில்லாத, அடாவடி கட்டணமில்லாத, மருந்தில்லாத மருத்துவ முறையை ஒரு முறை முயற்சிக்கக்கூடாது?

மாதத்தில் 3 வாரம் தமிழக முழுவதும் சுற்றுப்பயணத்திலும், ஒரு வாரம் மட்டும் அறந்தாங்கியிலும் தங்கி இருந்து அக்குபஞ்சர் வைத்தியம் செய்யும் மருத்துவர் முஹமது ரஃபி அவர்களை 80 98 66 11 60 என்ற எண்ணில்  தொடர்பு கொண்டு முன்பதிவின் மூலம் நேரடியாகவோ அல்லது நமது வீட்டிற்கே வரவழைத்தும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த எளிய மருத்துவ முறையை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சமுதாய அமைப்புக்கள் ஊர்தோறும் சிறப்பு அக்குபஞ்சர் மருத்துவ முகாம்களை நடத்த முன்வர வேண்டும்.

சந்திப்பில் உதவி
அப்துல் ஹக்கீம் – அறந்தாங்கி

புகைப்படங்கள்
ஜமால் முஹமது – அதிரை

தோள்பட்டை வலிக்கு ஒரு நாள் அக்குபஞ்சர் வைத்தியம் மூலம் குணமடைந்தவன் என்ற வகையில் நன்றியுடன் பரிந்துரைப்பது

அதிரை அமீன்

image

Close