வேண்டாம் புகைப்படம் இஸ்லாமிய மக்களுக்கு அதிரை பிறையின் ஓர் அறிவுரை..!!!

image

அன்பிற்கினிய சகோதரர்களே!

ஹஜ்ஜுப்பெருநாளின்போது, குர்பான் செய்யும் ஆடு, மாடு, ஒட்டகை போன்ற விலங்கினங்களை அறுக்கப்படும் நிகழ்வுகளை விடியோ, ஃபோட்டோ வடிவங்களில் Facebook, WhatsApp, imo, telegram, Twitter, Google+ போன்றவைகளில் பதிவுசெய்வதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ளுங்கள்!

ஏனென்றால், பகிரப்படும் அக்காட்சிகளைக்கொண்டு, இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் இயக்கங்கள், இட்டுக்கட்டி பொய்யான பிரச்சாரம் செய்யவும், இஸ்லாமிய சமுதாய மக்களை கொடூரமானவர்களாக சித்தரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது!

ஆகவே, நமக்கு நம்முடைய இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் அழகிய முறையில், ஊர் மக்களை ஒரே இடத்தில் திரட்டி, ஒரே ஜமாஅத்தாக பெருநாள் தொழுகை தொழுது, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றிடுவோம்!

ஜஸாகல்லாஹுல் கைர்.

(இச்செய்தியை, தங்களது சொந்தபந்தங்கள் & நட்பு வட்டங்களில் பகிர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.)

Close