திருச்சி M.A.M பொறியல் கல்லூரியில் அப்துல் கலாம் நினைவாக 100 மரக்கன்றுகள் நடப்பட்டன!

image

திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த சிறுகனூரில் அமைந்துள்ளது M.A.M பொறியியல் கல்லூரி. இங்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3000க்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் இன்று மதியம் 2.30 மணியவில் மறைந்த முன்னால் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்கள் நினைவாக இங்கு பயிலும் இயந்திரவியல் (Mechanical) பிரிவு மாணவர்களால் 100 மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன. இதில் கல்லூரி இயக்குனர் பேராசிரியர் திரு.U.S.சர்வதயாபரன் அவர்கள் கலந்துக்கொண்டு மரக்கன்று நடும் பணியை துவக்கிவைத்தார்.

image

Close