அதிரையில் நாளை முதல் ப்லாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் அபராதம்!

மாநிலம் முழுவதும் 536 பேரூராட்சிகள் உள்ளன. இப்பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், இயக்கம் பராமரிப்பு நிதி திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் ஆகஸ்ட் 15ம் தேதி (நாளை) முதல் பிளாஸ்டிக் இல்லா திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, கலை நிகழ்ச்சிகள், பொருட்காட்சி உள்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 15ம்தேதி முதல் கடை, பெரிய நிறுவனங்கள் பாலித்தீன் பைகளை பயன்படுத்தினால், அபராதம் வசூலித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் அனைத்து பேரூராட்சிகளிலும் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் 536 பேரூராட்சிகளிலும் தெர்மாகோல் பயன்பாட்டிற்கும் பேரூராட்சிகளின் இயக்குனர் ராஜேந்திர ரத்னு தடை விதித்துள்ளார்.தெர்மாகோள் மண்ணில் மக்காத பொருள் ஆகும். இதை எரித்தால் அதன் நச்சுத்தன்மை மனிதர்களின் சுவாசத்திற்கு சென்று, நுரையீரல் பாதிப்பு, கேன்சர் உள்ளிட்ட நோய்களை உருவாக்குகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள 536 பேரூராட்சிகளிலும் தெர்மாகோல் பயன் பாட்டிற்கு, பேரூராட்சிகளின் இயக்குனர் தடை விதித்துள்ளார்.
-தினகரன்

Close